அதிவேகமாக செல்லும் வாகனங்களின் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் - மக்கள் கோரிக்கை...

Asianet News Tamil  
Published : Nov 20, 2017, 08:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
அதிவேகமாக செல்லும் வாகனங்களின் உரிமத்தை இரத்து செய்ய வேண்டும் - மக்கள் கோரிக்கை...

சுருக்கம்

Need to cancel the license of high-speed vehicles - people request ...

இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் அதிவேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக  வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பெரிய நகர்.

இந்த நகரை மையமாகக் கொண்டு பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வதால் நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நகர் பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கனரக  வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், உயிரிழப்புகளும் ஏற்படுவது வழக்கமாகின்றன.

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்டறிந்து அதன் உரிமங்களை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

இது இருக்கறதாலதான பொண்ணுங்க கூட ஓவராக ஆட்டம் போடுற! ஃபுல் மப்பில் தூங்கிய கணவரை கதறி அலறவிட்ட மனைவி.!
தனியார் பள்ளிகளுக்கு டப் கொடுக்க போகும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.! ஜனவரி 19 முதல் 5 நாட்களுக்கு.!