பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5000 கோழிகள் கருகி உயிரிழப்பு; மூன்று மணிநேரம் போராடி தீயணைப்பு...

First Published Feb 12, 2018, 11:24 AM IST
Highlights
5000 chickens die in farm fire Three hours fighting fire ...


திருப்பூர்

திருப்பூரில் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5000 கோழிகள் கருகி உயிரிழந்தன. மூன்று மணிநேர போராட்டத்திற்கு பண்ணையில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகிலுள்ள வேப்பம்பாளையம், கருங்கல்காட்டைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (48). இவர் தனது தோட்டத்தில் கோழிப் பண்ணை வைத்து ஒப்பந்த அடிப்படையில் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார்.

அதில், 200 அடி நீளம், 22 அடி அகலத்தில் தகர மேற்கூரை கொண்ட பண்ணைக் கட்டடத்தில் 5000 கோழிகள் வளர்த்து வந்தால்.

இந்த நிலையில், நேற்று காலையில் பண்ணையில் திடிரென தீ பிடித்தது. தீ மளமளவெனப் பரவியதை உடனே யாரும் கவனிக்காததால் தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

பின்னர் தீயை கண்டதும் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துவிட்டு மக்களே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், போக்குவரத்து அலுவலர் வேலுசாமி உள்பட 10 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் பண்ணையில் இருந்த 5000 கோழிகளும் கருகி உயிரிழந்து விட்டன. பண்ணையின் கட்டட மேற்கூரையும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

பின்னர் காவலாளர்கள் மேற்கொண்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பண்னையில் இருந்த 5000 கோழிகளும் இறந்த சம்பவத்தால் அதன் உரிமையாளர் ஜெகதீசன் வருத்தத்தில் மூழ்கியுள்ளார்.

 

click me!