மக்களே ரெடியா !! வெளியே குப்பை போடுவர்களை வீடியோ எடுத்து கொடுத்தால் சன்மானம்.. எங்கு தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Oct 10, 2022, 11:57 AM IST
Highlights

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து ஆதாரங்களோடு கொடுப்பவர்களுக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

வேலூர் மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று வேலூர் மாநகாராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே போல் குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு ரூ.100 அபராதமும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் ஐந்து கருட சேவை; ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அதுமட்டுமின்றி காலி மனைகளில் குப்பைக் கொட்டினால் ரூ.200 அபராதம் போடப்படும்.  இதுதவிர குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் வீடுகளுக்கு ரூ.100 அபராதமும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமும் போடப்படும் என்று வேலூர் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்து ஆதாரங்களோடு கொடுப்பவர்களுக்கு ரூ.200 சன்மானம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மாநகாராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:உலகை ஆச்சரியப்படுத்தும் பிங்க் நிற வைரக்கல்.. ரூ.480 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை..

click me!