மூன்றே மாதத்தில் அரசுக்கு ரூ.4,988 கோடி வருவாய்...! ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்த்தி அசத்திய வருவாய் துறை

Published : Jul 14, 2022, 09:55 AM IST
மூன்றே மாதத்தில் அரசுக்கு ரூ.4,988 கோடி வருவாய்...! ஒரே ஆண்டில் இரு மடங்கு உயர்த்தி அசத்திய வருவாய் துறை

சுருக்கம்

தமிழக பத்திர பதிவுத்துறையில், 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

பத்திர பதிவுத்துறையில் வருவாய் அதிகரிப்பு

தமிழக அரசு நிதி பற்றாக்குறை காரணமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் காலதாமதம் ஆகியுள்ளது. இதன் காரணமாக ஆவின், டாஸ்மாக் பொருட்களின் விலையை உயர்த்தி இருந்தது.  மேலும் பத்திரப்பதிவு துறை 138 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவை செய்வதுடன் அரசு நிர்வாகத்திற்கு தேவையான நிதியை திரட்டி தருவதில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. மாநில சொந்த வரி வருவாயில் பெரும்பங்கை வகிப்பது பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறைகளாகும். இதில் பதிவுத் துறையில், கணினிமயமாக்கம் அதிகரித்ததன் காரணமாக, பத்திர பதிவு எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. 

itr filing date: income tax: இதை மட்டும் மறந்திடாதிங்க! இல்லாட்டி வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்

100 நாட்களில் 4988 கோடி வருவாய்

இந்தநிலையில் தமிழக பத்திரப்பதிவு துறை அமைச்சராக உள்ள மூர்த்தி, தனது  துறையில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் காரணமாக, இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பத்திரப்பதிவு துறை அதிக வருவாய் ஈட்டி உள்ளது. வருவாய்த்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பதிவுத்துறையில் கடந்த 1.4.2022 முதல் 12.7.2022 வரையிலான வருவாய் ரூ.4988.18 ஆகும். இது கடந்த வருடத்தில் இந்த காலகட்டத்தில் வசூலான ரூ. 2577.43 கோடியை விட ரூ. 2410.75 கோடி அதிகமாகும் என தெரிவித்துள்ளது தமிழக பதிவுத்துறையில், 100 நாளில் 4,988 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
 

இதையும் படியுங்கள்

personal loan interest: தனிநபர் கடன் வாங்கப்போறீங்களா? 5 முக்கிய விஷயங்கள் தெரிந்திருத்தல் அவசியம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!
மன்னார்குடியில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! அலறி துடித்த பயணிகளின் நிலை என்ன?