ரூ.4,805 கோடி அளவிற்கு நகை கடன் தள்ளுபடி... ஐ.பெரியசாமி விளக்கம்!!

Published : Apr 04, 2022, 03:44 PM IST
ரூ.4,805 கோடி அளவிற்கு நகை கடன் தள்ளுபடி...  ஐ.பெரியசாமி விளக்கம்!!

சுருக்கம்

தமிழநாட்டில் ஒரே வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 

தமிழநாட்டில் ஒரே வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் அறிவித்தது. அதன்படி வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக தகவல்கள் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.

சட்டப் பேரவைத் தோ்தலின் போது, திமுகவின் தோ்தல்  அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை அடகு வைத்தவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் விவசாயக் கடன், பயிா்க்கடன் வாங்கியவா்களை தவிா்த்து குடும்பத்தில் ஒருவா் உள்ளிட்ட பல்வேறு விதிகளுடன் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, இறுதிப்பட்டியலில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழுடன் அவா்களது நகைகளும் திரும்ப ஒப்படைக்கும் பணி இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.4,805 கோடி மதிப்புள்ள நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பேசிய தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தினால், இதுவரை 12,19,106 பேர்  பயனடைந்துள்ளனர். தமிழநாட்டில் ஒரே வாரத்தில் ரூ.4,805 கோடிக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் 12 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் 97.05 சதவீத அளவுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

டேட்டா திருடும் ஏர்டெல்..! 100mbps க்கு வெறும் 40 தான் கிடைக்குது.. சென்னையில் ஷோரூம் முன்பு போராட்டம்..
தமிழகத்தை பாலைவனமாக்க காங்கிரஸ் டார்கெட்.. லாலி பாடும் திமுக அரசு.. இபிஎஸ் ஆவேசம்!