ஏத்திட்டே போனா.. இழுத்துட்டு தான் போகனும்..! சென்னையில் நடந்த விசித்திரமான ஆட்டோ போராட்டம்..!

Nandhini Subramanian   | Asianet News
Published : Apr 04, 2022, 02:44 PM IST
ஏத்திட்டே போனா.. இழுத்துட்டு தான் போகனும்..! சென்னையில் நடந்த விசித்திரமான ஆட்டோ போராட்டம்..!

சுருக்கம்

இதோடு மோட்டார்சைக்கிள் மற்றும் சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து விசித்திரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. விலை உயர்வுக்கு நாடு முழுக்க எதிர்கட்சிகள் சார்பில் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. 

ஏற்கனவே தமிழகத்தில் தேநீர் விலை உயர்த்தப்பட இருப்பதாக தேநீர் கடை உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதை அடுத்து பல்வேறு பொருட்களின் விலையும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. விலை உயர்வை கண்டித்து கடந்த வாரம் நாடு தழுவிய தேசிய பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. 

போராட்டம்:

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாம்பரத்தில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் ஒன்று சேர்ந்து ஆட்டோ ஒன்றை கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து சென்றனர். 

ஒப்பாரி:

இதோடு மோட்டார்சைக்கிள் மற்றும் சிலிண்டர் உள்ளிட்டவைகளுக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து விசித்திரமான போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமை தாங்கினார். 

போராட்டத்தில் வழக்கறிஞர் பொற்செழியன், தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர் முத்துக்குமார், மாவட்ட துணை செயலாளர் பூவிழி, மற்றும் அக்கட்சியை சேர்ந்த சாமுவேல், ராமானுஜம், ஆதிசாலமன், திரூநீர்மலை தமிழரசன் உள்ளிட்டோரும், ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

பெட்ரோல், டீசல் விலை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவைகளின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி இந்தியாவில் கடந்த இரு வாரங்களாக 12 ஆவது முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

இன்று சென்னையில் ஒரு லட்டர் பெட்ரோல் விலை 38 பைசா அதிகரிக்கப்பட்டு லிட்டருக்கு 109 ரூபாய் 34 பைசாவும், டீசல் லிட்டருக்கு 38 பைசா அதிகரித்து லிட்டருக்கு 99 ரூபாய் 42 பைசா வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 94 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 99 பைசா உயர்த்தப்பட்டு இருக்கிறது. தொடர் விலை உயர்வு காரணமாக வாகன ஓட்டினகள் கடும் மன உளைச்சளுக்கு ஆளாகி உள்ளனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!