காக்கி வளையத்தில் சேப்பாக்கம்... இதுவரை இல்லாத அளவில் போலிஸ் குவிப்பு... பிரதமருக்கு இணையான பாதுகாப்பு!

First Published Apr 10, 2018, 4:17 PM IST
Highlights
4000 security personnel to be deployed for Chennai IPL match in wake of Cauvery protests


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. காவிரிக்காக போராடி வரும் நிலையில் அதை திசை திருப்பும் நிகழ்வாக ஐபிஎல் போட்டிகள் சென்னையில் நடத்தப்படுவதாக கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது அனால் கிரிகெட் வாரியம் அதை கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று, சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதையடுத்து போராட்டக்காரர்கள் எச்சரிக்கையால் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ள சேப்பாக்கம் பகுதிகளிலும், கிரிகெட் வீரர்கள் தங்கியுள்ள தனியார் ஹோட்டல்களும் போலிசின் கட்டுப்பட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு கிரிகெட் வீரர்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்கள் இன்று மாலை, தாங்கள் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து மைதானத்திற்கு சொகுசு பஸ்களில் அழைத்துவரப்படுவார்கள். முதலில் வீரர்களை தனித்தனிக் காரில் அழைத்து வரப்படுவதாக இருந்தது. அனால் அப்படியெதுவும் வேண்டாம் ஏன் எண்ணி பிறகு சொகுசுப் பேருந்தில் அழைத்துவர முடிவிவு செய்துள்ளனர்.

வீரர்கள் வரும் பஸ்களுக்கு, முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் அணிவகுக்க உள்ளன. வீரர்கள் செல்லும் சாலைகளில் வேறு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது முதலே, கிரிக்கெட் வீரர்கள் செல்லும் பாதையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவது இந்தியாவிலும் வழக்கமாக இருந்து வருவதுதான். ஆனாலும், இதுவரை இல்லாத அளவிற்கு இம்முறை பிரதமருக்கு இணையான உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.

click me!