பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பெண்கள் பலி....

 
Published : Oct 20, 2016, 05:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்து... 4 பெண்கள் பலி....

சுருக்கம்

மதுரை அருகே அரசு பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பொட்டுலபட்டி என்ற இடத்தில், தேனியில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் சம்பவ இடத்திலேயே 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தாயம்மாள் (70), பாண்டியம்மாள் (45) உயிரிழந்தனர். படுகாயமடைந்த ராக்கம்மாள் (65), ராமலட்சுமி (35), கணபதி, வீரம்மாள், ராஜங்கம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், ராக்கம்மாள், ராமலட்சுமி ஆகியோர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளாக  மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், மதுரையில் இருந்து உசிலம்பட்டிக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து டிரைவரின் கட்டப்பாட்டை இழந்து, எதிரே வந்த ஆட்டோ மீது மோதியதாக கூறினர். 

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்