தொடரும் இலங்கை கடற்படையின் அட்டகாசம் – 2௦ தமிழக மீனவர்கள் கைது..!!

 
Published : Oct 20, 2016, 04:58 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
தொடரும் இலங்கை கடற்படையின் அட்டகாசம் – 2௦ தமிழக மீனவர்கள் கைது..!!

சுருக்கம்

ராமநாதபுரம் அருகே மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 2௦ பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே தமிழக மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நாட்டுப் படகுகளில் வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர். ரோந்து வந்த இலங்கை கடற்படையினர்  தமிழக மீனவர்களின் படகுகளை விரட்டியடித்தனர். மீனவர்கள் அச்சம் அடைந்து கிளம்ப முயன்றபோது தமிழர்களின் படகுகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 20க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படையினர்  சிறைபிடித்து சென்றனர்.

இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு! NIAக்கு போக்கு காட்டி வந்த முக்கிய குற்றவாளி கைது! சிக்கியது எப்படி?