நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 4 சவரன் நகை பறிப்பு; தப்பிசெல்ல முயன்ற திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்... 

 
Published : Jun 08, 2018, 11:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 4 சவரன் நகை பறிப்பு; தப்பிசெல்ல முயன்ற திருடனை மடக்கி பிடித்த பொதுமக்கள்... 

சுருக்கம்

4 pound jewelry theft from woman people Catch thief who tried to escape ...


கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில், நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 4 சவரன் நகையைப் பறித்துவிட்டு தப்பிசெல்ல முயன்ற திருடனை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

கோயம்புத்தூர் மாவட்டம், அசோக் நகரைச் சேர்ந்தவர் கலாவதி (39). இவர் நேற்று முன்தினம் மாலை சாய்பாபா காலனி அருகே தனியார் பல்கலைக்கழகம் அருகே நடந்து சென்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கலாவதியின் கழுத்தில் கிடந்த 4 சவரன் நகையைப் பறித்துவிட்டு தப்பி செல்ல முயன்றனர். 

அப்போது கலாவதியின் அலறலைக் கேட்டு அருகிலிருந்தவர்கள் கூடி நகை பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.  பின்னர், அவரை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

அவர்களிடம் காவலாளர்கள் நடத்திய விசாரணையில், கரும்புக்கடை பிஸ்மி நகரைச் சேர்ந்த யாசர் அராபத் (27) என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடிய குனியமுத்தூரைச் சேர்ந்த பைரோஸ் என்பவரை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

இனி 'இதை' செக் பண்ணாம பேருந்து எடுக்க முடியாது.. அரசு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பறந்த உத்தரவு!
விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!