
ஜூசில் ஐஸ் குறைவாக இருந்ததாக கூறி கடை ஊழியரை தாக்கிய 4 கல்லூரி மாணவர்களை போலீசார் விசாரித்து வருகின்றர். கடை ஊழியரைத் தாக்கியதாக 4 பேர் மீது கடையின் உரிமையாளர் போலீசில் புகார் கூறியுள்ளார்.
நந்தனம் பகுதியில் உள்ள லஸ்ஸி ஷாப் ஜூஸ் கடையில், நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் ஜெகதீஷ் மற்றும் தனுஷ் ஆகியோர் ஜூஸ் அருந்தியுள்ளனர்.
ஜூஸில் ஐஸ் குறைவாக உள்ளதாக கடை ஊழியரிட அவர்கள் கூறியுள்ளனர். இரவு 12 மணி நேரம் என்பதால் ஐஸ் குறைவாக உள்ளதாக கடை ஊழியரும் கூறியுள்ளார்.
இது அவர்களுக்குள் பெரும் வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் அவர்களுக்கு கைகலப்பு ஏற்பட்டது. ஜூஸை ஊழியரின் முகத்தில் ஊற்றிய ஜெகதீஷ், தன்னுடைய மற்ற நண்பர்களை வரவழைத்து கடை ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கைகலப்பு நடைபெறுவதைப் பார்த்து விசாரித்தனர். அப்போது அவர்கள் நான்கு பேரும் ராயப்பேட்டை நியூ கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதல் தொடர்பாக கடை உரிமையாளர் அகமத் அலி, சைதாப்பேட்டை புகார் அளித்துள்ளார்.