
தண்டையார் பேட்டை ரவி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரை ஓராண்டு குண்டர் தடுப்புக்காவலில் வைக்கவேண்டுமென மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு நகல் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் புழல் சிறையில் சிறைத்துறை அதிகாரியாக பிரதீப் பணியாற்றி வருகிறார். அங்கு கைதியாக இருக்கும் ரவி மீது குண்டர் சட்ட ஆணை வந்துள்ளதை விடுதலை ஆணையென தவறாக கருதி சிறை அதிகாரி பிரதீப் கைதி ரவியை விடுதலை செய்துள்ளார். இதனால் சிறைத்துறை இவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறைத்துறை நிர்வாகம் இவரை இடை நீக்கம் செய்துள்ளது. மேலும் துறைவாரியான விசாரணைக்கும் உத்திரவிட்டுள்ளது.