தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி… அதிர்ச்சி தரும் மா.சுப்ரமணியன்!!

By Narendran SFirst Published Dec 25, 2021, 3:06 PM IST
Highlights

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட ரிஸ்க் நாடுகளில் இருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

தமிழகத்தில் 34 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த சூழலில் இந்தியா முழுவதிலும் பரவி வரும் ஒமைக்ரான் தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவி வரை தொடங்கியுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 34 பேர்  ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருபர்களை விமான நிலையத்தில் தீவிரமாக பரிசோதிக்கும் நடவடிக்கைள் தற்போது மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. இந்த சூழலில் மக்கள் பண்டிகை காலங்களில் கூட்டமாக கூடுவதால் கொரோனா,  ஒமைக்ரான்  பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் கூட்டம் கூடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும். கடைகள் ,வணிக வளாகங்கள், திரையரங்குகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அத்துடன் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றவேண்டும் ,தவறாமல் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 12 பேர் குணமடைந்துள்ளனர். வெளிநாட்டில் இருந்து வருவோர் அனைவருக்கும் கட்டாய தனிமைப்படுத்துதல் அவசியமாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளது. ஒமைக்ரான் வேகமாக பரவுவதால் புத்தாண்டை மக்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும்.  புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளை கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும். நட்சத்திர  விடுதிகளில் கொண்டாட்டங்களை  தவிர்க்க வேண்டும். கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலு நலமாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

click me!