வண்டலூர் பூங்காவில் அதிகரிக்கும் வனவிலங்கு உயிரிழப்புகள்.. 32 வயதான மணி என்ற சிங்கம் உயிரிழப்பு..

By Thanalakshmi VFirst Published Jun 27, 2022, 6:13 PM IST
Highlights

வண்டலூர் உயிரியல் பூங்காவில், சுமார் 32 வயதான மணி என்ற சிங்கம் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தது. 
 

வண்டலூர் உயிரியல் பூங்காவில், சுமார் 32 வயதான மணி என்ற சிங்கம் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தது. 

மேலும் படிக்க:பிளஸ் 1 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் எப்போது பெறலாம்..? அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு..

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்கப் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன.  இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக சரியான பராமரிப்பு இல்லாமல், சிங்கம், புலி உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்து வருவது வாடிக்கையாக இருந்து வந்தது . அதேபோல் சமீபத்தில் கூட வரிகுதிரை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது.

மேலும் படிக்க:ஜூலை 18ல் கல்லூரிகள் திறப்பு.. முதலாமாண்டு பொறியியல் வகுப்பு எப்போது..? அமைச்சர் அறிவிப்பு..
 
இந்நிலையில் சுமார் 32 வயதான மணி என்ற சிங்கம் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தது.  வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட சிங்கம் உயிரிழந்துள்ளன. தற்போது 32 வயதான மணி என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது.

மேலும் படிக்க:நெஞ்சுவலியால் காவல் நிலையத்தில் படுத்த ஆட்டோ டிரைவர்.. கடவுளாக உயிரை காப்பாற்றிய போலீஸ்.

தற்போது பூங்காவில் 10 சிங்கங்கள் மட்டுமே உள்ளன. கள்ளக்குறிச்சி பூங்காவில் இருந்து கடந்த 2000 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சிங்கம் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 22 ஆண்டுகளாக பராமரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 7 மணி அளவில் இறந்தது பூங்கா ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

click me!