சிலிண்டருக்கு மாதம் ரூ 300 மானியம்.! அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

By Ajmal KhanFirst Published Mar 13, 2023, 12:05 PM IST
Highlights

புதுவை நிதிநிலை அறிக்கையில்  அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும், புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம் வழங்கப்படும் என்பன் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை நிதித்துறை அமைச்சரும், முதலமைச்சருமான ரங்கசாமி அறிவித்துள்ளார். 

புதுவையில் பட்ஜெட் தாக்கல்

புதுவை சட்டசபையில்  கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு முழுமையான பட்ஜெட்டை முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தார்.  இதற்காக மாநில திட்டக்குழு கூட்டத்தை கூட்டி புதுவை மாநிலத்தின் பட்ஜெட் தொகையாக ரூ.11 ஆயிரத்து 600 கோடியை ஒதுக்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்திருந்தது. . இதையடுத்து  இன்று காலை மீண்டும் சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி  பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது புதுவை பட்ஜெட்டில் பொதுமக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதன் படி தமிழ் வளர்ச்சியையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு புதுச்சேரியில் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டது.  அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் வரை சிபிஎஸ்இ பாடத்திட்டமாக மாற்றப்படும். நடப்பு ஆண்டில் அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் பெண்ணுக்கு கடன் கொடுத்து உதவுவது போல் பாலியல் தொல்லை: விஏஓ கைது

சமையல் எரிவாயுவிற்கு மானியம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாதம் ரூ.300 மானியம், 70 வயது முதல் 79 வயது வரை உள்ள மீனவ பெண்களுக்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்படும். மகளிர் மேம்பாட்டுக்கு ரூ. ஆயிரத்து 330 கோடி ஒதுக்கப்படும்.  புதுவையில் வான்கோழிகள் வளர்க்க ஊக்குவிக்க 50 சதவீதம் மானியம், ஆட்டு பண்ணை வைக்க 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். மேலும்  எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.2 கோடி ஒதுக்கீடு, ஆதி திராவிடர்களுக்கு ரூ.9 லட்சம் வரை 100 சதவீதம் மானியம், பிற வகுப்பினருக்கு ரூ.5 லட்சம் வரை 50சதவீதம் மானியம் வழங்கப்படும் என புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்தார்.

இதையும் படியுங்கள்

ஆஸ்கர் விருதை வென்ற இந்திய திரைப்படங்கள்..! மகத்தான சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

click me!