தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு!!

By Narendran SFirst Published Jan 8, 2022, 10:19 PM IST
Highlights

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 30 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 30 ஐபிஎஸ் அதிகாரிகளில் 17 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு 13 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 30 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 30 ஐபிஎஸ் அதிகாரிகளில் 17 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு 13 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.ஜி.க்களாக 14 பேருக்கும், டி.ஐ.ஜி.க்களாக 3 பேருக்கு பதவி உயர்வு அளித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரம்யா பாரதி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை சரக டிஐஜியாக பிரவேஷ்குமார், சேலம் சரக டிஐஜியாக பிரவீன்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் சரக டிஐஜியாக ரூபேஷ்குமார் மீனா, வேலூர் சரக டிஐஜியாக ஆனி விஜயா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருப்பூர் காவல் ஆணையராக பாபு நியமிக்கப்பட்டுள்ளார். பொன்னி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மதுரை சரக காவல்துறை டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நீதி மற்றும் மனித உரிமை காவல்துறை ஐஜியாக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகேஸ்வரி ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை சரக டிஐஜியாக கயல்விழி, தமிழக காவல்துறை குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக காமினி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துரைக்குமார் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று நெல்லை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியம்மாள் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூடுதல் ஆணையராக கபில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக விஜயகுமாரி, லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி.யாக லலிதா லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

click me!