கோவையில் இரு வேறு பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியம் தொந்தரவு கொடுத்த புகாரில் 3 ஆசிரியர்கள் கைது செய்யபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு உடற்கல்வி அசிரியராக பிரபாகரன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், கடந்த வெள்ளிக்கிழ்மை பள்ளி முன்பு திரண்டு, ஆசிரியர் பிராபாகரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குனியமுத்தூர் போலீசார், முற்றுக்கையில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இப்பள்ளியில் பயிலும் 5 மாணவிகளுக்கு தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாகவும் தலைமையாசிரியரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பெற்றோர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து, ஆசிரியர் பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து ஆசிரியர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்கும்படி காவல்துறைக்கும், வருவாய் கோட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க:நர்சிங் மாணவியை ஓட்டல் அறையில் பூட்டி வைத்து 18 மணி நேரம் உல்லாசம்... கல்லூரியில் இறக்கி விட்டு ஓட்டம்.
இதேபோல், பொள்ளாச்சி அருகே உள்ள பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக உள்ள பாலசந்திரன் என்பவரும் இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் ராமகிருஷ்ணன் என்பவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும், அப்பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் நடந்த போக்ஸோ சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பிறகு, பாலியல் துன்புறுத்தல் குறித்து 1091 என்ற எண்ணிலும், அதன் பின் 181 என்ற எண்ணிலும் மாணவி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, அந்த மாணவியிடம் குழந்தைகள் நல அலுவலர் விசாரித்தனர். பின்பு, நேற்று பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க:பேராசிரியை மனைவியை நண்பர்களுக்கு விருந்து வைத்த கணவன்... 2 லட்ச ரூபாய்க்காக அட்டுழியம்.