
தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவம் தொடர்பான செய்திகள் தினந்தோறும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் நேற்று கோவையில் மாணவி ஒருவரை கல்லூரி மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளே வட மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் தனது கணவன் உடன் கோயம்புத்தூர் மாவட்டம் தெக்கலூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அங்கு வேலை பிடிக்காத காரணத்தால் சொந்த ஊருக்கு செல்ல திருப்பூர் ரயில் நிலையம் வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் அவர்களிடம் அறிமுகம் ஆன நிலையில், நாங்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனம் அருகில் தான் உள்ளது எனவும், அங்கு நல்ல சம்பளத்தில் இரண்டு பேரையும் சேர்த்து விடுகிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனையடுத்து கணவன் மனைவி மற்றும் குழந்தை தங்க இடம் இல்லாததை அறிந்த மூன்று பேரும் தாங்கள் குடியிருந்து வரும் லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். இரவு உணவு தாயார் செய்தவர்கள் அனைவரும் ஒன்றாக சாப்பிட்டுள்ளனர்.
இரவு தூங்க முடிவு செய்த நிலையில் இவர்கள் 6 பேரும் ஒரே அறையில் தூங்கியுள்ளனர். அப்போது வடமாநில இளைஞர்கள் நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்கள் கையில் கத்தி வைத்து பெண்ணின் கணவனை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் மூன்று பேரும் ஒருவர் மாற்றி ஒருவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த பெண்ணை அங்கிருந்து மிரட்டி வெளியில் அனுப்பியுள்ளனர். வெளியே வந்த நிலையில் அந்த ஒடிசா பெண் தனது கணவர் மற்றும் குழந்தையோடு சேர்ந்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் வந்து புகார் அளித்தனர். இதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலிசார் உடனே விரைந்து லட்சுமி நகர் பகுதியில் உள்ள நதீம், டானிஷ் மற்றும் முர்சித் என மூன்று வட மாநில இளைஞர்களை அவர்கள் தங்கியுள்ள அறையில் வைத்து வடக்கு போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.