பெண்ணை கட்டிப்போட்டு பட்டப்பகலில் 200 சவரன் நகை கொள்ளை - 3 பேர் கைது...!

 
Published : Dec 26, 2017, 09:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
பெண்ணை கட்டிப்போட்டு பட்டப்பகலில் 200 சவரன் நகை கொள்ளை - 3 பேர் கைது...!

சுருக்கம்

3 people arreseted about 200 shaven jewelry robbery in the tirunelveli

நெல்லையில் பிரபல பழக்கடைஉரிமையாளர் மனைவியை கட்டிப்போட்டு சுமார் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை ஜங்ஷன் பெருமாள் வடக்கு ரதவீதியை சேர்ந்தவர் செல்லப்பா மகன் தங்கத்துரை. இவர் மொத்த பழக்கடை உரிமையாளராக உள்ளார். 

இவரது மனைவி காந்திமதி. இவர் கடந்த 12 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, வேலைக்கார பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில், 2 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து காந்திமதியை மிரட்டி பீரோவில் இருந்து 200 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். 

இதையடுத்து அவரது உறவுக்காரப்பெண் வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்டு கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தான் மர்மநபர்கள் அவரை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தெரியவந்தது. 

இதுகுறித்து நெல்லை ஜங்ஷன் குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் அந்த வழியாக உள்ள கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இதில் கொள்ளையர்களை அடையாளம் கண்டு போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்
இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!