திண்டுக்கல்லை உலுக்கிய இரட்டை கொலை வழக்கு - குற்றாவாளிக்கு 3 ஆயுள் மற்றும் 24 ஆண்டுகள் சிறை

First Published May 15, 2017, 5:43 PM IST
Highlights
3 life sentence for murderer


திண்டுக்கல் அருகே நடைபெற்ற இரட்டை கொலையில், ஒருவருக்கு 3 ஆயுள் மற்றும் 24 ஆண்டுகள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பால சமுத்திரத்தில் தனியார் பள்ளி தாளாளராக வேலை பார்ப்பவர் தனுஸ்வரி. இவருக்கு சியாமளா 14 வயது மகள் உள்ளார்.

திருப்பூர் மாவட்டம் மங்கலம்பட்டியை சேர்ந்த காளிஷ்வரன் என்பவர் தனுஸ்வரியிடம் 8 ஆண்டுகளாக காரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே காளிஷ்வரன் தனுஸ்வரியிடம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதை திருப்பி தருமாறு தனுஸ்வரி கண்டிப்பை காட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த காளிஷ்வரன் தனுஸ்வரியையும் அவரது உறவினர் செந்தில் குமார் என்பவரையும் கொலை செய்து விட்டு அவர்கள் வீட்டில் இருந்த 23 லட்சம் ரூபாயை சொகுசு காருடன் எஸ்கேப் ஆனார். மேலும் சிறுமி சியமளாவையும் கடத்தி சென்றுள்ளார்.

இதையடுத்து செல்போன் சிக்னலை வைத்து போலீசார் காளிஸ்வரனை கண்டுபிடித்து கைது செய்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலைவழக்கில் காளிஷ்வரனுக்கு 3 ஆயுள் மற்றும் 24 ஆண்டுகள் சிறை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

click me!