தமிழ்நாடு முழுக்க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை நேற்று ரெய்டு நடத்தியது.
முதலில் 40 இடங்களில் ரெய்டு நடப்பதாக கூறப்பட்டது. பிறகு 200 இடங்களில் ரெய்டு நடப்பதாக தகவல் வெளியானது. சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடக்கிறது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்ற அதிகாரிகளை, அமைச்சரின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகளின் காரையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அதிகாரிகள் சோதனை நடத்தாமல் கரூர் நகர காவல் நிலையத்திலும், மாவட்ட எஸ்.பி அலுவலகத்திலும் தஞ்சமடைந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது திமுகவை சேர்ந்தவர்கள் வருமானவரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு தாக்கியதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாசராவ் ஆகிய 4 பேர் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை கோல்டுவின்ஸ் பகுதியில் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் குழுக்கள் பிரிந்து சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் இன்று 2வது நாளாக கரூர், கோயம்புத்தூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களின் இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூரில் 7 இடங்களில் சோதனை நடைபெறுகிறது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க..சென்னை - இலங்கைக்கு சூப்பரான கப்பல் பயணம்.. ஒரு டிக்கெட் எவ்வளவு தெரியுமா?