
ஆவூர்,
புதுக்கோட்டையில் 285 விவசாயிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் மானிய விலையில் வேளாண் இடுபொருட்களை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலையில், ஒருங்கிணைந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டிடம் ரூ.1.5 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.
அந்த கட்டிடத்தின் திறப்பு விழாவும், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் விவசாயிகளுக்கு இடு்பொருட்கள் வழங்கும் விழாவும் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கணேஷ் தலைமைத் தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அண்ணாமலை வரவேற்று பேசினார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய கட்டிடத்தை குத்து விளக்கு ஏற்றித் திறந்து வைத்தார். பின்பு அவர் பேசினார்.
அமைச்சர் துரைக்கண்ணு தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத் திட்டத்தின்கீழ் 285 விவசாயிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் மானிய விலையில் வேளாண் இடுபொருட்களை வழங்கிப் பேசினார்.
இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி, அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ரெத்தினசபாபதி, விராலிமலை முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சுப்பையா, அட்மா தலைவர் பழனியாண்டி, முன்னாள் ஒன்றியகுழு துணைத்தலைவர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் நன்றித் தெரிவித்தார்.