மருத்துவர்கள் 24 மணிநேரம் கெடு – மாலை 4 மணிக்கு தெரியும்

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
மருத்துவர்கள் 24 மணிநேரம் கெடு – மாலை 4 மணிக்கு தெரியும்

சுருக்கம்

ஜெயலலிதாவுக்கு இன்று மாலை 4 மணி வரை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படும். அதன்பின் சாதாரண முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 3 மணி வரை ஜெயலலிதாவுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. சிறு அறுவை சிகிச்சை சற்று முன் முடிந்தது. 



முதல்வரின் உடலில் ஏற்படும் எதிர்வினையைப்பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதயநாளத்தில் உள்ள அடைப்பை அறுவை சிகிச்சையின்றி சரிசெய்யக்கூடியது ஆஞ்ஜியோ ஆகும்.

ஜெயலலிதாவின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அறுவை சிகிச்சை எந்த அளவிற்கு பலன் அளித்திருக்கிறது என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவர்கள் கூறுகையி, இன்று மாலை 4 மணி வரை தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். அதன்பின், அவருக்கு சாதாரண சிகிச்சை அளிக்கப்படும். உடலில் ரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றை சீராக்குவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு முடிந்தது.

இன்று மாலை 4 மணிக்கு பின்னரே அவரது உடல் நிலை முன்னேற்றம் குறித்து தெரிவிக்கப்படும். ஆனாலும், அதிமுக தொண்டர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ளவும், அவர் பூரண குணமடைய வேண்டும் என கூறி, பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

சங்கி குழு பொங்கலில் பராசக்தி டீம்..! ஜனநாயகன் மட்டும் பிளாக்..! திமுகவை போட்டு பொளக்கும் மாணிக்கம் தாகூர்
சென்னை சங்கமம் கிராமிய கலை நிகழ்வுகளுடன் தொடக்கம் ! திமுக எம்.பி.கனிமொழி பேட்டி