இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா..29 மாவட்டங்களில் இன்று பாதிப்பு பூஜ்ஜியம்..

Published : Apr 16, 2022, 07:47 PM IST
இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா..29 மாவட்டங்களில் இன்று பாதிப்பு பூஜ்ஜியம்..

சுருக்கம்

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக பதிவாகியுள்ளது. 

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக பதிவாகியுள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 23 ஆக குறைந்துள்ளது. 

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 12 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,025 ஆகவே உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 225 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,14,983 ஆக உள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பில் விவரம்: அரியலூர் 0, செங்கல்பட்டு 6, சென்னை 12, கோயம்புத்தூர் 1, கடலூர் 0, தர்மபுரி 0, திண்டுக்கல் 0, ஈரோடு 1, கள்ளக்குறிச்சி 0, காஞ்சிபுரம் 2, கன்னியாகுமரி 0, கரூர் 0, கிருஷ்ணகிரி 0, மதுரை 0, மயிலாடுதுறை 0, நாகப்பட்டிணம் 0, நாமக்கல் 0, நீலகிரி 0, பெரம்பலூர் 0, புதுகோட்டை 0, ராமநாதபுரம் 0, ராணிப்பேட்டை 0, சேலம் 0, சிவகங்கை 0, தென்காசி 0, தஞ்சாவூர் 1, தேனி 0, திருப்பத்தூர் 1, திருவள்ளூர் 0, திருவண்ணாமலை 1, திருவாரூர் 0, தூத்துக்குடி 0, திருநெல்வேலி 0, திருப்பூர் 0, திருச்சி 0, வேலூர் 1, விழுப்புரம் 0, விருதுநகர் 0 கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Bank Account Death Claim: வங்கி கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் பணத்தை பெறுவது எப்படி? நாமினி முதல் வாரிசு வரை!
Ration Card Update: 3 மாத கால அவகாசம்! முடங்கிய ரேஷன் கார்டை மீண்டும் செயல்படுத்துவது எப்படி?