மீண்டும் 21 தமிழக மீனவர்கள் கைது.. ஒரே வாரத்தில் 58 மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்

By Ajmal Khan  |  First Published Mar 17, 2024, 7:17 AM IST

இந்திய கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 80க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் செல்வாய்க்கிழமை 22 மீனவர்களும், வியாழக்கிழமை 15 மீனவர்களும், இன்று 21 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி, மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

undefined

ராமேஸ்வரம் மீனவர்கள்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இன்று கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 பேரை கைது இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மீனவர்களை விடுவிக்க தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் மீனவர்களின் கைது சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படியுங்கள்

பெருவெள்ளத்தையும் தாங்கும் வகையில் தாமிரபரணி நதிக்கரையில் நடப்பட்ட நாட்டு மரங்கள்; தன்னார்வலர்கள் முன்னெடுப்பு

 

click me!