“வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் ரூபாய் நோட்டு…” எப்படி வெளியானது ரூ.2000 படம்…? அதிகாரிகள் அதிர்ச்சி

Asianet News Tamil  
Published : Nov 10, 2016, 04:20 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
“வாட்ஸ்அப்பில் வைரலாக பரவும் ரூபாய் நோட்டு…” எப்படி வெளியானது ரூ.2000 படம்…? அதிகாரிகள் அதிர்ச்சி

சுருக்கம்

ரூ.2000 நோட்டு நாளை வெளியிடப்படுவதாக, பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அந்த படத்தையும் வெளியிட்டார். ஆனால், முன்னதாகவே அந்த படம் வெளியாகி, மக்களிடம் பரவிவிட்டது. இதனால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் எப்படி வெளியானது என விசாரிக்கப்படுகிறது.

மத்திய அரசு புதிதாக 2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகள் நாளை முதல் நாடெங்கும் அறிமுகம் செய்யப்படுகிறது. 11ம்தேதி முதல் புதிய ரூ.2000 நோட்டுகள் ஏ.டி.எம்.கள் மூலம் நாடெங்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.

ஆனால் ரூ.2000 நோட்டுகளின் படம் நவம்பர் 6 ம் தேதியே இணைய தளங்களில் வெளியாகிவிட்டது. இதையடுத்து, லட்சக்கணக்கானோர் ரூ.2000 நோட்டின் கலர் மற்றும் வடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் மக்கள் மத்தியில் பரவ செய்தனர்.

பெரும்பாலானவர்கள் அந்த படங்கள் போலியாக சித்தரிக்கப்பட்டுள்ளன என்று நினைத்தனர். நேற்று பிரதமர் மோடி அறிவித்த பிறகு, புதிய ரூ.2000 நோட்டு படங்கள் உண்மையானவை என்று தெரியவந்தது.

இந்நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியில் வரும் முன்பு ரூ.2000 நோட்டு படம் இணைய தளங்களிலும், வாட்ஸ்ஆப் குரூப்களிலும் பரவிய சம்பவம், மத்திய நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த படம் எப்படி வெளியானது என்று மத்திய அரசு அதிகாரிகள் அதிர்ச்சிடைந்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

சினிமாவை மிஞ்சிய சம்பவம்! ஃபுல் மப்பில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர்! கால் முறிந்து வலியால் துடித்த இருவர்.. பகீர் வீடியோ
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி