மீண்டும் அலறிய சாத்தான்குளம்! 20 வயது இளைஞர் ஓட ஓட விரட்டி முகம் சிதைத்து படுகொலை! அப்படி என்ன பகை?

Published : Feb 07, 2025, 10:19 AM ISTUpdated : Feb 07, 2025, 10:23 AM IST
மீண்டும் அலறிய சாத்தான்குளம்! 20 வயது இளைஞர் ஓட ஓட விரட்டி முகம் சிதைத்து படுகொலை! அப்படி என்ன பகை?

சுருக்கம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இளைஞர் ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுண்ணாங்குடி கிராமத்தைச் சேர்ந்த உலகநாதன் என்பவரின் மகன் சந்துரு (20). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து பின்னர் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், சில நாட்களிலேயே அந்த பெண் அவரை பிரிந்துவிட்டார். 

இந்நிலையில்  நேற்று 6-ம் தேதி இரவு அவர் அண்ணாநகர் பகுதியில் அவர் வேலை செய்வதற்கான கூலி பணத்தை வாங்க அதே பகுதியை சேர்ந்த பேச்சி என்பவரது வீட்டிற்கு வெளியே நின்று பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சந்துருவை நோக்கி ஓடி வந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சந்துரு உயிர் பயத்துடன் தப்பிக்க முயற்சித்தார். 

இதையும் படிங்க: இந்த முறை கன்பார்ம்! நாதகவில் இருந்து விலகிறார் காளியம்மாள்? அடுத்து குறி வைத்துள்ள கட்சி எது தெரியுமா?

பின்னர் பேச்சியின் வீட்டிற்குள் உயிர் பயத்துடன் ஓடிய நிலையில் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று பேச்சியின் வீட்டிற்குள் வைத்து சந்துருவின் முகத்தை கொடூரமாக சிதைத்து படுகொலை செய்தனர்.  மேலும் அவரின் அலறல் சுத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சந்துரு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: பட்டப்பகலில் சினிமாலை மிஞ்சிய சம்பவம்! அரசு ஊழியர் வெட்டி படுகொலை! வெளியான பகீர் காரணம்!

மேலும் தூத்துக்குடி மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் மோப்பம் பிடிக்கப்பட்டு விசாரணை நடந்தது. சுமார் அரை கிலோமீட்டர் தூரம் வேக வேகமாக ஓடிய மோப்ப நாய் நாகர்கோவில் சாலையில் ஒரு முக்கிய ஆதாரத்தை கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாத்தான்குளத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!
ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி