அடுத்தடுத்து சிக்கும் அதிமுகவினர்.! பாம் வைப்பதும் எடுப்பதும் நானேவா? இபிஎஸ்யை விளாசும் ரகுபதி!!

Published : Feb 06, 2025, 04:37 PM ISTUpdated : Feb 07, 2025, 08:14 AM IST
அடுத்தடுத்து சிக்கும் அதிமுகவினர்.! பாம் வைப்பதும் எடுப்பதும் நானேவா? இபிஎஸ்யை விளாசும் ரகுபதி!!

சுருக்கம்

சேலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான வீடியோவில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமி இந்த வீடியோவைப் பகிர்ந்து திமுகவைக் குறை கூறியிருந்த நிலையில், வீடியோவில் இருப்பது அதிமுக நிர்வாகி எனத் தெரியவந்துள்ளது.

கள்ளச்சாராய விற்பனை அதிமுக நிர்வாகி கைது

சேலத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அதில் தொடர்புள்ளது அதிமுக நிர்வாகி என கண்டறியப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதனை எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு ‘அய்யகோ, திமுகவை பாருங்கள்’ என்று எழுதியிருந்தார். 

குற்றங்களில் அதிமுகவினர்

இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய்ந்தால் வீடியோவை வெளியிட்டது அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க வட்ட செயலாளராக இருந்த ராஜாவின் உறவினரான ரவி என்பவர் என்பதும் அவருக்கு கள்ள சாராயம் வாங்கி வந்து கொடுத்ததே அதிமுகவின் ராஜா தான் என்பதும் விசாரணையில் தெரியவந்து அந்த அதிமுக பிரமுகர் ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த சில நாட்களாக எடப்பாடி முன்வைத்த குற்றச்சாட்டுகளான அண்ணாநகர் பாலியல் வழக்கு, காரில் திமுக கொடிகட்டிய ரவுடிகள்  தொடங்கி நேற்றைய கள்ளச்சாராய வீடியோ வரை குற்றச்சாட்டுகள் அனைத்திலும் அடுத்த நாளே அவர்கள் அதிமுகவினர் எனத் தெரிய வருகிறது; கைது செய்யப்படுகிறார்கள். பாம் வைப்பதும் நானே எடுப்பதும் நானே என்ற கணக்கில் அவசர அவசரமாக எடப்பாடி ட்வீட் செய்வதும், அதனை அதிமுகவினர் பரப்புவதும் உண்மை வெளியானவுடன் அமைதி காப்பதும் என ஒரே ‘பேட்டர்ன்’தான். ஒரு அஜெண்டாவுடனேயே செயல்பட்டு வருகிறார்.  

இபிஎஸ் ‘செட்டிங்’ செய்கிறாரோ.!!

எதிர்க்கட்சித் தலைவர் என்பது அரசியலில் முக்கியமான பொறுப்பு. ஆனால் சொந்த கட்சியினர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டது தெரிய வந்தால் உடனே அரசை குறை கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டு அந்த சம்பவத்தையே திசை மாற்றி மக்களை குழப்பம் பணியைத்தான் எடப்பாடி செய்து வருகிறார். ஒருவேளை ‘செட்டிங்’ செய்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. இப்படிப்பட்ட மலிவான அரசியல் செய்வதை விடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆக்கப்பூர்வமான எதிர்கட்சித் தலைவராக செயல்படுவாரா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: ரூ.2,500 உடனே கிடைக்க இந்த அப்டேட் அவசியம்.! 2 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்.!
Govt Scheme: ரூ. 15 லட்சம் கொடுக்கும் அரசு.! நீங்களும் முதலாளியாக நேரம் வந்தாச்சு.!