PM MITRA பூங்கா திட்டம் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்... மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!!

By Narendran SFirst Published Mar 23, 2023, 12:18 AM IST
Highlights

PM MITRA திட்டம் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். 

PM MITRA திட்டம் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். விருதுநகரில் அமையவுள்ள PM MITRA பூங்காவை சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கத்தில் காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி கொண்டு செல்ல பணியாற்றி வருகிறார் தமிழக முதல்வர். சுதந்திரம் பெற்று 75 ஆவது ஆண்டில் இருக்கிறோம். கொரோனா, உலக அளவில் பொருளாதார பாதிப்பு இருக்கும் நிலையில் இந்திய 5 இடத்தில் ஆவது பொருளாதாரம் உள்ளது. உலகமே எதிர்ப்பார்க்கும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார்.

இதையும் படிங்க: மார்ச்.24 அன்று ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும்... இன்று பிறை தென்படாததால் தலைமை காஜி அறிவிப்பு!!

அடுத்த 25 ஆண்டுகள் இந்தியா வளர்ச்சியை நோக்கி செல்லும். இந்தியாவில் முதல் ஜவுளி பூங்கா திட்டத்தை ஒதுக்கியதற்கு பிரதமருக்கு நன்றி. தமிழக முதலமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்த விரைவாக, திறமையாக செயல்படுகிறார். தமிழகம் மீது பற்று கொண்டவர், தமிழ் கலாச்சாரம், பண்பாடு மீது மிகுந்த பற்று கொண்டவர் பிரதமர் மோடி. தமிழ்மொழி மூத்த மொழியாக இருப்பது குறித்து காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அடுத்து சௌராட்டிர சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்ட உள்ளது. உலக அளவில் காஞ்சிபுரம் பட்டு சேலை பலரும் விரும்பக் கூடியது. ஜவுளி பூங்கா அமைக்க பல்வேறு மாநிலங்கள் ஆர்வம் காட்டின.

இதையும் படிங்க: சென்னையில் மார்ச்.25 வரை டிரோன்கள் பறக்கத் தடை... ஜி 20 மாநாடு கருத்தரங்கம் நடைபெறுவதையொட்டி உத்தரவு!!

ஆனால் இதில் தமிழ்நாட்டுக்கு முதல் இடமாக கிடைத்துள்ளது. இந்த பூங்கா அடிக்கல் அமைக்கும்போது விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் நானும், பிரதமரும் கூட நேரில் வர ஆர்வமாக உள்ளோம். மேலும் ஆண்டாள் அருளை பெற ஆர்வமாக உள்ளோம். நாட்டில் 4 கோடி பேர் நேரடியாகவும், 6 கோடி பேர் மறைமுகமாக ஜவுளி துறையில் வேலை செய்து வருகின்றனர். விளை நிலத்தில் இருந்து தொழிற்சாலை, நூல், வடிவமைப்பு, ஆடைகள், ஏற்றுமதி என்று அனைத்தும் ஒருங்கிணைந்த ஒரு இடத்தில் கிடைக்கும் வகையில் ஜவுளி பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக 20 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். இந்த துறையில் 70 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!