தமிழகத்தில் இன்று 2,537 பேருக்கு கொரோனா… 2,560 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

Published : Jul 10, 2022, 09:02 PM IST
தமிழகத்தில் இன்று 2,537 பேருக்கு கொரோனா… 2,560 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!!

சுருக்கம்

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,671 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,537 ஆக குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 2,671 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 2,537 ஆக குறைந்துள்ளது.

இதையும் படிங்க: 18 ஆயிரத்தை கடந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 18,257 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 844 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 804 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதை அடுத்து கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38,028 ஆகவே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,819 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,560 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,44,682 ஆக உள்ளது.

இதையும் படிங்க: மக்கள் அச்சப்பட வேண்டாம்.. தமிழகத்தில் காலரா பாதிப்பு இல்லை.. அமைச்சர் கொடுத்த அமைச்சர்..

மாவட்ட வாரியாக: அரியலூர் 3, செங்கல்பட்டு 434, சென்னை 804, கோயம்புத்தூர் 119, கடலூர் 22, தர்மபுரி 12, திண்டுக்கல் 22, ஈரோடு 32, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 78, கன்னியாகுமரி 70, கரூர் 5, கிருஷ்ணகிரி 26, மதுரை 38, மயிலாடுதுறை 17, நாகப்பட்டிணம் 13, நாமக்கல் 29, நீலகிரி 11, பெரம்பலூர் 14, புதுகோட்டை 14, ராமநாதபுரம் 10, ராணிப்பேட்டை 10, சேலம் 55, சிவகங்கை 19, தென்காசி 41, தஞ்சாவூர் 23, தேனி 18, திருப்பத்தூர் 0, திருவள்ளூர் 151, திருவண்ணாமலை 24, திருவாரூர் 18, தூத்துக்குடி 65, திருநெல்வேலி 88, திருப்பூர் 29, திருச்சி 48, வேலூர் 14, விழுப்புரம் 34, விருதுநகர் 66 என்ற எண்ணிக்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது.  

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: இவர்களுக்கெல்லாம் மகளிர் உரிமைத்தொகை கட்? தமிழக அரசு அதிரடி பிளான்! அதிர்ச்சியில் பெண்கள்!
Tamilnadu Power Cut: நாளை தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க மக்களே!