சூப்பர் நியூஸ்.. வாரம் தோறும் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்.. காரணம் தெரிஞ்சா ஹப்பி ஆயிடுவீங்க..?

Published : Apr 03, 2022, 04:37 PM IST
சூப்பர் நியூஸ்.. வாரம் தோறும் 2 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்.. காரணம் தெரிஞ்சா ஹப்பி ஆயிடுவீங்க..?

சுருக்கம்

மும்பை மாநகரத்தில் நடைமுறையில் உள்ளதை போல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 2 மணி நேரம் சாலைகளில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி செய்ய போக்குவரத்து நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.   

மும்பை மாநகரத்தில் நடைமுறையில் உள்ளதை போல் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 2 மணி நேரம் சாலைகளில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சி செய்ய போக்குவரத்து நிறுத்தப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தெரிவித்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அண்மையில் பொறுப்பேற்ற சரோஜ்குமார் தாகூர், மும்பையில் இருப்பதை போல் நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கான சிறப்பு திட்டத்தை அவர் இன்று அறிமுகம் செய்து வைத்தார். 

அதன்படி, ஒசூர் மாநகரில் முக்கியமான 5 இடங்களில் வாரம்தோறும் ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டு நடைபயிற்சி மற்றும் சைக்கில் பயிற்சி மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம் ஓசூரிலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், மும்பை பெருநகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இத்திட்டம் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. இந்த 2 மணி நேர இடைவெளியில் ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஓசூர் மாநகரில் குற்ற சம்பவங்களை தடுக்க இரண்டு சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு மாநில எல்லை என்பதால் ஒசூரை அடுத்து இருக்கக்கூடிய கர்நாடகா எல்லைப்பகுதியான ஜூஜூவாடி சோதனைச்சாவடியிலும், வேப்பனஹள்ளி அருகே ஆந்திரா மாநில எல்லை பகுதியிலும் அதி விரைவுப்படை குவிக்கப்பட்டு கஞ்சா, குட்கா, ரேசன் அரிசி கடத்தல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும். குட்கா, கஞ்சா கடத்தல் விற்பனை என்பது முழுமையாக தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!