தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது மெகா முகாம்.... 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

Published : Dec 26, 2021, 09:21 PM IST
தமிழகத்தில் நடந்து முடிந்த 16வது மெகா முகாம்.... 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி!!

சுருக்கம்

தமிழகத்தில் 16வது மெகா முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 16வது மெகா முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஓமைக்கரான் கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துதலை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழகம் முழுதும் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 15 கட்டமாக தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று 16வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், இன்று நடைபெற்ற 16வது மெகா தடுப்பூசி முகாம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 16வது மெகா முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பிலிருந்து இதுவரை 42,671 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்று தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை - 5,17,126,  இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை- 12,14,151, மொத்தமாக- 17,31,277 லட்சம் நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளதுள்ளனர்.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் -85.76, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம்-57.94, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 92 லட்சமாக உள்ளது. கொரோனாவால் இறந்த 375 முன்கள பணியாளர்களுக்கு தலா 25 லட்சம் வீதம் 93 கோடியே 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதற்கு திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுவரை நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனசோர்வை போக்க கவுன்சிலிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 16 நபர்கள் ஒமிக்ரான் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர், மரபணு பரிசோதனைகளின் முடிவுகளை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என ஒன்றிய சுகாதார துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. முடிவுகளை விரைந்து வழங்கினால் மட்டுமே நிலைமையை மக்களுக்கு எடுத்துக்கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரையாண்டு தேர்வு விடுமுறையில் எதிர்பாராத ட்விஸ்ட்! குஷியில் துள்ளிக்குதித்து கொண்டாடும் பள்ளி மாணவர்கள்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்