
மதுரையில் வீட்டிற்குள் 3 நாட்கள் தொடர்ச்சியாக யோகா செய்த நபர் உயிரிழந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை சூர்யாநகர் மீனாட்சியம்மன் நகர் வடக்கு 6வது தெருவில் வசிப்பவர் மல்லிகா, இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தன. சில நாட்களுக்கு முன்பு இரண்டாவது மகன் உயிரிழந்த நிலையில், மகள் மற்றும் மகனுடன் வாழ்ந்துவந்துள்ளார். இந்நிலையில் மூத்த மகனான ஜெகதீபன்(39), டெல்லியில் பணிபுரிந்துவந்த நிலையில் பணியை விட்டுவிட்டு மதுரையில் தனது தாயுடன் இருந்துவந்துள்ளார். இவர் சிவபக்தர் என்பதால் நாள்தோறும் தவம் செய்வதாக கூறி, பல்வேறு யோகா ஆசனங்களை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி அன்று, குண்டலினி யோகா செய்ய போவதாகவும், 3 நாட்களுக்கு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், தமது தங்கை மற்றும் தாயிடம் கூறிய ஜெகதீசன், வீட்டின் அறையை பூட்டியபடி குண்டலினி யோகா செய்ய தொடங்கியுள்ளார். யோகா செய்ய போவதாகவும், 3நாட்களுக்கு யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என தனது தங்கை மற்றும் தாயிடம் கூறிவிட்டு வீட்டின் அறையை பூட்டியபடி யோகா செய்ய தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் அறையில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கதவை திறந்து பார்த்த போது உடல் அழுகி நிலையில் ஜெகதீசன் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனா். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலை காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி, பின்னர் உடல் எரியூட்டப்பட்டது. ஜெகதீசனின் தாய் மற்றும் சகோதரி வீட்டினுள் இருந்த நிலையில், ஜெகதீபன் உயிரிழந்தது கூட தெரியாமல் 2 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில், உடல் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.