ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 16 பேர் பணியிடமாற்றம்... அறிவித்தது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Dec 2, 2022, 9:58 PM IST
Highlights

ஐஏஎஸ் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

ஐஏஎஸ் அதிகாரிகள் 16 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைஞர் நலன், விளையாட்டு வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளராக அதுல்யா மிஸ்ரா நியமனமிக்கப்பட்டுள்ளார். வீடு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளராக அபூர்வா நியமனம் செய்யப்பட்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டாளர் கிரண் குரலா பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். உயர்க்கல்வித்துறை கூடுதல் செயலாளராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த ஹிதேஷ்குமார் மக்வானா, டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தமிழக கோயில்களில் செல்போன் பயன்படுத்த தடை… உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் எஸ்.ஜே.சிரு, சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சிறப்பு செயலாளர் டி.ஆபிரகாம், சமூக சீர்திருத்த துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இ.சரவணவேள்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நகர் ஊரமைப்பு இயக்கக திட்ட இயக்குனராக வி.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்துறை சிறப்பு மேலாளர் ஆர்.லில்லி, நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் சிறப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: லிவிங் டூகெதரில் இருந்தவர்களுக்கு இடையே தகராறு… கொடைக்கானலில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

பேரூராட்சிகள் இயக்குனராக இருந்து வரும் டாக்டர் ஆர்.செல்வராஜ் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பிறப்படுத்தப்பட்டோர் நலத்துறையின் ஆணையாளராக ஆர்.நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த ஜான் லூயிஸ் அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் சாகோசெர்வ் மேலாண் இயக்குனராக ஐஏஎஸ் அதிகாரி எம்.என்.பூங்கொடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார நல இயக்குனராக அனில் மேஷ்ராம் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

click me!