தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயிகளிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயிகளிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கோயில் அர்ச்சகர் சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
இதையும் படிங்க: லிவிங் டூகெதரில் இருந்தவர்களுக்கு இடையே தகராறு… கொடைக்கானலில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
undefined
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர் தாக்கல் செய்திருந்த மனுவில் நவம்பர் 14 முதல் கோயில் பணியாளர்கள் உட்பட அனைவரும் கோயிலுக்குள் செல்போன் கொண்டுச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் செல்போன்களை பாதுகாக்கவும், டோக்கன் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் 15 இடங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை பாரதியார் பல்கலைக்கழக விடுதியில் மாணவன் தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
இந்த இடங்களில் செல்போன் கொண்டுச் செல்வது கண்டறியப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை அடுத்து கோயில்களின் புனிதம் மற்றும் தூய்மையைக் காப்பாற்றும் வகையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்பாடுத்த தடை விதித்ததோடு பக்தர்கள் கலாச்சார உடை அணிந்து வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என அறநிலையத் துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.