மழையால் பாதிக்கப்பட்ட மக்கள்… கரண்ட் பில் கட்ட 15 நாட்கள் அவகாசம்!! | ChennaiFlood

By Narendran SFirst Published Nov 12, 2021, 10:13 AM IST
Highlights

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

#chennaiflood மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பெய்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளக்காடாக கட்சியளித்தன. இதை அடுத்து வெள்ள நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னையில் மீண்டும் வெள்ளம் ஏபட்டது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்கசிவினால் விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழைநீர் பாதிப்பு குறைந்தவுடன் விரைவில் அனைத்து இடங்களிலும் மின்இணைப்பு வழங்கப்படும். சென்னையில் 4,000 பணியாளர்கள் தமிழகம் முழுவதும் 36,000 பணியாளர்கள் என இரவு முழுவதும் மின் இணைப்பு பணிகளில் மின்சார வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் அனைத்து பகுதிக்கும் மின் இணைப்புகள் வழங்கப்படும். வடகிழக்கு பருவ மழையால் சென்னையிலுள்ள 223 துணை மின் நிலையங்களில், 221 துணை மின் நிலையங்கள் செயல்பாட்டில் இருந்தது பருவமழை பாதிப்பால், 2 துணை மின் நிலையங்கள் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. கோடம்பாக்கம் துணை மின் நிலையம் சரிசெய்யப்பட்டு விநியோகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. துணை மின் நிலையத்தில் மழை நீர் சூழ்ந்திருப்பதால் மழைநீர் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை நீர் அகற்றப்பட்டு வெள்ளம் வடிந்த பகுதிகளில் படிப்படியாக மின் இணைப்பு வழங்கப்படும். சென்னையில் 66 ஆயிரம் மின் இணைப்பு தரகளுக்கு மின் இணைப்புகள் நிறுத்தப்பட்டு , 38 ஆயிரம் இணைப்புதாரர்களுக்கு தற்போது மீண்டும் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்பட்டுள்ள மீதமுள்ள 28 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.  மழை பாதிப்பால் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 400 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக தூத்துக்குடி ,மேட்டூர் மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும். இந்த உத்தரவு குறித்து அந்தந்த மின்வாரிய அலுவலகத்துக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடும் மழையினால் பாதிக்கப்பட்ட நுகர்வோர்களுக்கு மின்வினியோகம் உடனடியாக வழங்குவது தொடர்பாக, கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

click me!