14 வயது சிறுமியை கர்ப்பமாக்கி ரூ.3 லட்சம் தருவதாக பேரம்...! மனைவி 6 மாத கர்ப்பம்..!

 
Published : May 19, 2018, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
14 வயது சிறுமியை கர்ப்பமாக்கி ரூ.3 லட்சம் தருவதாக பேரம்...! மனைவி 6 மாத கர்ப்பம்..!

சுருக்கம்

14 years student is pregananat by a married person

14 வயது சிறுமியை கர்ப்பமாக்கி ரூ.3 லட்சம் தருவதாக பேரம்...! மனைவி 6 மாத கர்ப்பம்..!

கிருஷ்ணகிரி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கிவிட்டு மூன்று லட்சம் ரூபாய் பணம் தருவதாக பேரம் பேசியவனுக்கு அடி, உதை விழுந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த நத்தகயம் பகுதியை சேர்ந்தவன் ஆசைதம்பி. 32 வயதான இவனுக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஆசைத்தம்பியின் மனைவி தற்போது ஆறு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் வாலிப்பட்டியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியை ஒருவரை கடந்த 6 மாதமாக பின் தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளான்

பின்னர் அந்த  சிறுமி கர்ப்பமானதால், இதனை அறிந்த அவருடைய பெற்றோர்கள் ஆசிதம்பி வசிக்கும் ஊருக்கு சென்றும்  பெரியவர்கள் முன்னிலையில்  பேச்சு  வார்த்தை நடத்தி உள்ளனர்.

மேலும் ஆசை தம்பி படறி முழு விவரம் பெற்று, பின்னர்  மாணவியின் பெற்றோர் தன் மகளை திருமணம் செய்துகொள்ள  வேண்டும் என   தெரிவித்து உள்ளனர்

அதற்கு திருமணமெல்லாம் செய்து கொள்ள முடியாது, வேண்டுமென்றால் நஷ்ட ஈடாக 3 லட்ச ரூபாய் கொடுத்துவிடுவதாகவும், பணத்தை வாங்கி கொண்டு கருகலைப்பு செய்துகொள்ளுமாறும் ஆசைத்தம்பி கூறியுள்ளான்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் பெற்றோர், ஆசைத்தம்பியை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்த ஆசைத்தம்பி அடிதாங்க முடியாமல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

இதையடுத்து சிறுமி உறவினர்கள் பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் ஆசைத் தம்பி மீது புகார் அளித்தனர். ஆனால் போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடிப்பதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தன் மனைவி 6 மாத கால கர்ப்பமாக இருந்த நிலையில், சைக்கில் கேப்பில் மாணவியிடம் இது போன்று நடந்துள்ளார் ஆசை தம்பி.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகளுக்கு கொத்தாக 9 நாட்கள் விடுமுறை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டாட்டம்!
மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!