எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மேலும் மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: நெல்லையில் சமூக மோதல்.. தடுத்து நிறுத்திய சபாநாயகர் அப்பாவு - குவியும் பாராட்டுக்கள் !
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மீனவர்கள் பல்வேறு கோரிக்களை வலியுறுத்தியும் இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை. தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கனமழை எதிரொலி... சீர்காழியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்!!
எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை கடற்படை, மீனவர்களின் படகை பறிமுதல் செய்துள்ளது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் காரைநகர் முகாமில் வைத்து இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.