உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் மக்கள்.. கர்ப்பிணி, குழந்தை உட்பட 13 பேர் தமிழகம் வருகை..

Published : Apr 22, 2022, 04:02 PM IST
உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் மக்கள்.. கர்ப்பிணி, குழந்தை உட்பட 13 பேர் தமிழகம் வருகை..

சுருக்கம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 13 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர்.  

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் 13 பேர் தமிழகம் வந்தடைந்துள்ளனர்.இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைப்பால்,  கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவு பொருட்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் ஒரு நாளைக்கு 13 மணி நேர மின் வெட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் ஒரு நாளை இரு வேளை உணவு முறைக்கு மாறி வருகின்றனர். மேலும் இத்தகைய சூழலுக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் விரிவடைந்து வருகிறது.

இந்நிலையில் அதிபர், பிரதமரை தவிர அமைச்சரவையில் இடம்பெற்ற 26 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்த்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் மக்கள் விரும்புவது அதிபர் மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பதை தான். எனவே நாங்கள் இந்த ஆட்சியில் இடம்பெற விரும்பவில்லை என்று அறிவித்தனர்.

 இதனிடையே தற்காலிகமாக நிதி, வெளியுறவு உள்ளிட்ட முக்கிய 4 துறைகளில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இருப்பினும், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற செயலரிடம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இலங்கையில் நிலவும் மின்வெட்டு, உணவு பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு போன்றவற்றை நீக்க நிதியுதவி கேட்டு இலங்கை அரசு சர்வதேச நிதியத்தை நாடியுள்ளது. 

அண்டை நாடான இலங்கைக்கு, இந்தியா ரூ. 7,600 கோடி கடன் உதவி வழங்கியது. மேலும் டீசல், அரசியும் அனுப்பியுள்ளது. இந்த நிலையில் இலங்கைக்கு மேலும் ரூ.3,800 கோடி கடன் உதவியை இந்தியா வழங்க உள்ளது. எரி பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த சூழலில், இலங்கையில் இருந்து கடல் வழி பயணமாக அங்குள்ள தமிழர்கள் தமிழகம் வருகின்றனர். நேற்று கர்ப்பிணி பெண், குழந்தை உட்பட 13 பேர் தமிழகம் வந்துள்ளனர்.

இதுவரை 55 பேர் இலங்கையிலிருந்து தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு, மண்டபம் கேம்ப் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமிம் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இருந்து இரண்டு படகுகளில் தனுஷ்கோடிக்கு வந்த அவர்களை ராமேஸ்வரம் கடற்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு லாரி லாரியாக சென்ற பிஸ்கெட்! மாஸ் காட்டும் அறநிலையத்துறை!