பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள்! நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Published : Mar 02, 2025, 04:16 PM ISTUpdated : Mar 02, 2025, 04:19 PM IST
பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள்! நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்! முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

சுருக்கம்

நாளை 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மாணவர்கள் மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் தேர்வை எழுத வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 27 வரை நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவி, மாணவியருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாட்டின் 12- ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவச்செல்வங்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர். 

கடந்த ஒராண்டுகாலமாக மாணவச்செல்வங்களாகிய உங்களுக்கு உங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உங்களது கல்விக்கு மிகுந்த உறுதுணையாகவும், தூண்டுகோலாகவும் இருந்து வழி நடத்தியிருப்பார்கள். அவர்களது அரவணைப்பில் நீங்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள ஆயத்தமாக இருப்பீர்கள். இப்பொதுத்தேர்வுகள் உங்களது உயர்க்கல்விக்கும், வாழ்க்கைக்கும் மிக முக்கியமான அடித்தளமாகும். நீங்கள் தேர்வினை மன அமைதியுடன், தன்னம்பிக்கையுடன் எழுத வேண்டும். நீங்கள் இதுவரை செய்த முயற்சிகள், உங்கள் தேர்வில் நல்ல முடிவுகளைத் தரும். உங்களின் உழைப்பில் முழு நம்பிக்கையும்
எனக்குள்ளது. 

பதற்றமின்றி, உற்சாகத்துடன் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உடல்நலம், தூக்கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களது உயர்கல்விக்காக புதுமைப்பெண், நான் முதல்வன்  போன்ற பல்வேறு திட்டங்களை இவ்வரசு செயல்படுத்தி வருகிறது. நானும் தமிழ்நாடு அரசும் உங்கள் பக்கத்திலேயே எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம். உங்கள் கடின உழைப்புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்
Tamil News Live today 08 December 2025: 1 லட்சம் பேர் வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலா பின்னுக்கு தள்ளி சாதனை.. யார் தெரியுமா?