
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழகம் முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வவெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தருமத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மற்றும் ராணி ஆகிய தம்பதியினரின் மகன் மனீஷ் குமார் என்பவர் 498/500 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாநில அளவில் இரண்டாம் பிடித்த மாணவி
மேலும் இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார். இவரது தாயார் ராணி ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம், தமிழ் மொழி பாடத்தில் 98 மதிப்பெண்களும், ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100, மொத்தமாக 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மாவட்ட ஆட்சியராவதே அலட்சியம்
இவர் தனது கல்லூரி படிப்பை நிறைவு செய்து யுபிஎஸ்சி தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியர் ஆகி மக்களுக்கு சேவை செய்வதே விருப்பமென தெரிவித்துள்ளார். மதிப்பெண் பெற்ற மாணவரை பெற்றோர்கள் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர்கள் ஆசிரியை ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினார்கள்.