தலைக்குப்புற கவிழ்ந்த 108 ஆம்புலன்ஸ்; நோயாளியை அழைத்துவர சென்ற ஓட்டுநர், உதவியாளர் பலத்த காயம்..

 
Published : Jun 09, 2018, 07:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
தலைக்குப்புற கவிழ்ந்த 108 ஆம்புலன்ஸ்; நோயாளியை அழைத்துவர சென்ற ஓட்டுநர், உதவியாளர் பலத்த காயம்..

சுருக்கம்

108 ambulance met accident driver and assistant injured

தருமபுரி

தருமபுரியில் நோயாளியை அழைத்து வர சென்ற 108 அவசர ஊர்தி தலைக்குப்புற கவிழ்ந்ததில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் பலத்த காயமடைந்தனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் நகரைச் சேர்ந்த  ஓட்டுநர் திருஞானசம்பந்தம் (30), உதவியாளர் வேடியப்பன் (23) ஆகிய இருவரும் 108 அவசர ஊர்தியில்  தருமபுரியில் இருந்து அரூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர்.  

அரூரில் நோயாளி ஒருவரை அழைத்துவர சென்று கொண்டிருந்த அவசர ஊர்தி ஆர்.கோபிநாதம்பட்டி என்னும் இடத்தில் திடிரென கட்டுப்பாட்டை இழந்தது. இதில், 108 அவசர ஊர்தி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. 

இதில், ஓட்டுநர் திருஞானசம்பந்தம், உதவியாளர் வேடியப்பன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். 

அதனைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேறொரு அவசர ஊர்தியை வரவழைத்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.  இதுகுறித்து மொரப்பூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
Tamil News Live today 25 December 2025: டிடிவி, ஓபிஎஸ் உடன் கூட்டணி பேச்சு., அதிமுகவில் இருந்து பலரும் தவெக வருவார்கள்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி