தமிழகத்தில் ஆயிரம் மதுக் கடைகள் மீண்டும் திறப்பு !! திருத்தப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பால் குடித்துக் கொண்டாடும் குடி மகன்கள் !!!

First Published Sep 2, 2017, 7:53 AM IST
Highlights
1000 liquier shops are opended


மதுக்கடைகள் தொடர்பான உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கி தீர்ப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட்டதையடுத்து மூடப்பட்ட 1000 மதுக்கடைகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 2800 மதுக்கடைகள் மூடப்பட்டன. மேலும் 1183 மதுக்கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டன.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில திருத்தங்களை செய்தது உத்தரவிட்டது.

அதன்படி நகரங்களுக்கு இடையே இருக்கும் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக் கடைகளை மூடச் சொல்லவில்லை என்றும், 20 ஆயிரத்துக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள  மதுக்கடைகளை மட்டுமே மூடினால் போதும் என அந்த திருத்தப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் பழைய இடத்திலே நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. ஏற்கனசே 1103 கடைகள் இட மாற்றம் செய்து செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மீண்டும்  மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் குடி மகன்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 கம் ழகம்

 

 

click me!