
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததையடுத்து, தனது தலைமையிலான அரசு என்னென்ன சாதனைகள் செய்துள்ளது என்ற பட்டியலை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவுக்குள் நடந்த உட்கட்சிப் பூசலில் முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் மாற்றப்பட்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்தததையடுத்து, அவர் தலைமையிலான அமைச்சரவை செய்துள்ள 100 நாட்கள் சாதனைப் பட்டியலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
அதன்படி இந்த 100 நாட்களில் மகப்பேறு நிதி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு.
மீனவர்கள் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1,75,00 வீதம் 5,000 வீடுகள் கட்ட ஆணை.
விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி நிவாரணம்.
ரூ.200 கோடி செலவில் அம்மா இருசக்கர வாகனத்திட்டத்தில் முதல்வர் கையெழுத்து.
தென்னையில் இருந்து நீரா பானம் உற்பத்தி செய்ய அரசு அனுமதி.
வேளாண் உற்பத்தி அதிகரிக்க 1,58,000 விவசாயிகளுக்கு ரூ.882 கோடி பயிர்க்கடன்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை இருமடங்காக உயர்வு.
அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்துக்கு ரூ.133 கோடி ஓதுக்கீடு.
1,161 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை அறிவிக்கும் நடைமுறை ரத்து.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 187 உதவி பேராசிரியர்கள் நியமனம்
குடிநீர் பற்றாக்குறையை போக்க பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.100 கோடி ஒதுக்கீடு.
போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை ரூ.1,250 கோடி ஓதுக்கீடு
400 கோடியில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகள்.
தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.1,500-க உயர்வு.
ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 4,900 மெட்ரிக் டன் அரிசி வழங்கல்.
நியாயமான முறையில் பொதுமக்களுக்கு மணல் கிடைக்க ஏற்பாடு.
தமிழகம் முழுவதும் புதிதாக 169 பேருந்துகள் இயக்கம்.
விழுப்புரம், ராமநாதபுரம், தருமபுரியில் புதிய சட்டக்கல்லூரி தொடங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு சாதனை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.