பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள்…. அசந்து போன அதிகாரிகள்….

Asianet News Tamil  
Published : Jun 19, 2018, 10:55 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள்…. அசந்து போன அதிகாரிகள்….

சுருக்கம்

10 tonn plastic goods got from a godown in kanjeepuram

காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு குடோனில் 10 டன் எடையுள்ள தடை செய்யப்பட் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

காஞ்சீபுரம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு கடந்த ஓராண்டாக தடை  விதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்துகிறார்களா என நகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது  சோதனை செய்து பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் காஞ்சீபுரம் ரெட்டிப்பேட்டை தெருவில் உள்ள ஒரு குடோனில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனரும், தனி அதிகாரியுமான சர்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர், நகராட்சி சுகாதார துறை அதிகாரி டாக்டர் முத்து மற்றும் சுகாதாரத்துறையினருடன் காஞ்சீபுரம் ரெட்டிப்பேட்டை தெருவில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் ஆய்வு செய்தார்.

அப்போது அந்த குடோனில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள், தட்டுகள் என 10 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

காஞ்சீபுரம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல், தட்டு, பைகள் உள்பட இந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்கவோ, உபயோகப்படுத்தவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டரின் அறிவுரையின் பேரில் அவ்வப்போது கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து வருகிறோம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொருட்கள் பயன்படுத்தினாலோ அல்லது வைத்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

திமுகவின் லாரி மக்கர் பண்ண ஆரம்பிச்சுருச்சு.. உங்க கூட்டணி நிலைக்காது.. எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிசாமி!
திடீர் ட்விஸ்ட்..! தவெகவில் இணையும் பாஜக Ex மத்திய அமைச்சர்..! தட்டித் தூக்கும் விஜய்..!