
வேலூர் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட 10 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் வியாழக்கிழமை அன்று கீழே கொட்டி அழிக்கப்பட்டன.
வேலூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவலாளகள் கடந்த 2011-ஆம் ஆண்டு சேண்பாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், 10 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை பறிமுதலும் செய்தனர்.
நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மதுபாட்டில்கள், ஐந்து ஆண்டுகள் ஆனதால் நச்சுத் தன்மை அதிகரித்து காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பத்தாயிரம் மதுபாட்டில்களையும் அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு காவலாளர்கள் மதுபாட்டில்களை பத்தாயிரம் மதுபாட்டில்களையும் கீழேக் கொட்டி அழித்தனர்.