
நடப்பு ஆண்டும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. அதன்படி,தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டார்.
அதன் படி 10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ம் தேதி தொடங்குகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிவடைகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ல் தொடங்கி 30ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 9ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை நடைபெறுகிறது.
12ம் வகுப்பு மாணர்களுக்கு பொதுத்தேர்வு முடிவு ஜூன் 23ம் தேதியும், 10 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 17 ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எப்போதில் இருந்து எப்போது வரை கோடை விடுமுறை என்ற விவரமும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மே 13 வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. அதற்குப் பிறகு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஜூன் 13ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகின்றன.அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புக்கு 12 நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக தொழில் கல்வி என்ற பொதுத்தேர்வு அறிமுக செய்யப்பட்டுள்ளது. அதன்படி மே 21 ஆம் தேதி தொழிற்கலவி பாடத்தேர்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 8000 மாணவர்கள் இந்த தேர்வினை எழுதிகின்றனர். மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என்று தேர்வு செய்யப்பட்டு, தொழிற்கல்வி பாடத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதனிடையே தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் தொழிற்கல்வி தேர்வு அறிவிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதும் அவசியவில்லை எனவும் அதன் மதிப்பெண் பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் கணக்கில் வராது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர்களின் திறனை மேம்படுத்தவே 10-ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.