ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்; ஆரம்பித்தது சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம்…

Asianet News Tamil  
Published : Jan 16, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்; ஆரம்பித்தது சென்னையில் தண்ணீர்ப் பஞ்சம்…

சுருக்கம்

சென்னை

சென்னையில் தொடங்கிய தண்ணீர்ப் பஞ்சத்தால், அண்ணாநகர் பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10க்கு விற்கப்பட்டது.

அண்ணாநகர் பகுதியில் 8,9 மற்றும் 10வது தெருக்களில் டிராக்டர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தார்கள். தண்ணீர்ப் பஞ்சம் காரணமாக பொதுமக்களும் பணத்தை பற்றி கவலைப் படாமல், திரளாக வந்து தண்ணீர் வாங்கிச் சென்ன்றனர்.

கார்ப்பரேசன் தண்ணீரை அதிக விலைக்கு விற்பதா என்று அவரிடம் பொதுமக்களைச் சார்ந்த ஒருவர் வினா எழுப்பினார். அதற்கு தண்ணீர் விற்பவர், இது கார்ப்ரேஷன் தண்ணீர் இல்லை. வல்லநாடு தண்ணீர் அதான் இந்த விலை என்று கூறினார்.

பின்பு சிறிது தண்ணீர் வாங்கி குடித்து பார்த்த அந்த பொதுமக்களில் ஒருவர் தண்ணீர் சப்பென்று இருந்ததை உணர்ந்து இது வல்லநாடு தண்ணீர் அல்ல என்பதையும் ஓட்டுநரிடம் மிரட்டி விசாரித்தபோது, இது புதுகோட்டை தண்ணீர் என்பதையும் கண்டறிந்தார்.

சென்னையில் இப்போது தான் தண்ணீர் பஞ்சம் தலைத்தூக்கி இருக்கிறது. ஆரம்பத்திலே தண்ணீர் ரூ.10-க்கும், அந்த ஊரு தண்ணீர், இந்த ஊரு தண்ணீர் என்று போலி விளம்பரங்கள் மூலம் அதிக விலைப் பெறுவதும் தொடங்கியுள்ளது.

மதுவில்லாமல் மக்களால் வாழ முடியும். ஆனால், தமிழகத்தில் பஞ்சம் இல்லாமல் மது கிடைக்கிறது. தண்ணீர் இல்லாமல் மக்களால் வாழ முடியாது. ஆனால், தண்ணீருக்கு பஞ்சத்தையும், பிற மாநிலத்தாரிடம் கையேந்தும் நிலைக்கும் இந்த அரசு மக்களைத் தள்ளியுள்ளது.

இதுகுறித்து, திருவாளர் பொதுசனம் கூறுகையில், “தாமிரபரணி ஆறு பாயும் நம் ஊரில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலமையா என்று மனம் மிகவும் வருத்தப்படுகிறது. சுயநலமே குறிக்கோளாக உள்ள அரசியல்வாதிகளால் இன்னும் என்னவெல்ளாம் நடக்கபோகிறதோ? காமராஜரைபோல் நீங்கள் அணைகள் கட்ட வேண்டாம் அவர், உண்டாக்கின குளம், அணைகளை தூர் வாரினாலே போதும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Government Employee: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்.. 7.50 லட்சம் முதல் ரூ.27 லட்சம் வரை! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!