10 நாட்கள்.. மக்கள் தப்பிக்கவே முடியாது.. தட்டி தூக்க போகும் மழை…

Published : Oct 11, 2021, 07:36 AM IST
10 நாட்கள்.. மக்கள் தப்பிக்கவே முடியாது.. தட்டி தூக்க போகும் மழை…

சுருக்கம்

தமிழகத்தில் 10 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் 10 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பெரும்பாலானா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. கோவை, ஈரோடு, நீலகிரி, விழுப்புரம், நெல்லை என மழை தட்டியெடுத்து வருகிறது.

இந் நிலையில் இந்த மழை அடுத்த 10 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும், வெப்பச்சலனம் எதிரொலியாகவும் கோவை, நீலகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். தருமபுரி, விழுப்புரம், செங்கல்பட்டு என பல மாவட்டங்களில் வரும் 14ம் தேதி வரை கனமழை தொடரும்.

தற்போது வடக்கு அந்தமான், அதையொட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதிகளில் குறைந்த தாழ்வழுத்த பகுதி உருவாக உள்ளது. தென்மேற்கு பருவகாற்றின் தாக்கமே இதற்கு காரணம் இன்னும் 10 நாட்கள் இந்த பருவகாற்று தீவிரமாக இருக்கும்.

அதன் பிறகு தான் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறியப்படுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!