கவனத்திற்கு !! 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு.. விவரம் உள்ளே..

By Thanalakshmi VFirst Published Sep 16, 2022, 3:01 PM IST
Highlights

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 9 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை அக்டோபர் 9 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:சூப்பர் செய்தி.. தோட்டக்கலை மானிய திட்டம்.. விவசாயிகள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்..

அது போல் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் பொது காலாண்டுத் தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

மேலும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் வளரறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதலாக விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்றும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே காலாண்டு தேர்வு தேதிகளை முடிவு செய்துக் கொள்ளலாம் என்றும் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு.. குரூப் 3 ஏ தேர்வு தேதி அறிவிப்பு.. எபப்டி விண்ணப்பிப்பது..?

முன்னதாக காலாண்டு தேர்வு நாட்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென்று தமிழக பள்ளிகளில் நிகழாண்டு பொது காலாண்டு தேர்வுகள் கிடையாது என்றும் நேற்று பள்ளிகல்வித்துறை அறிவித்தது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வுகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறும் திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பள்ளி அளவில் வினாத்தாள்களை தயாரித்து காலாண்டு தேர்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் தேர்வு தேசிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!